கோவிட்-19 சமயத்தில் வெப்பத்தைத் தணிக்கும் முறை தொடர்பாக ஏசி, ஏர்கூலர், ஸ்பிளிட் ஏசி, எக்சாஸ்டர் ஃபேன் உள்ளிட்டவற்றை இயக்குவது, வெப்ப பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து மத்திய பொதுப்பணித்துறை வழிகாட்டு நெறிகளை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த மத்திய பொதுப்பணித்துறையின் செய்திக்குறிப்பு:
1) ஏர்கூலர் மற்றும் ஏசி இயந்திரங்களை இயக்கும் வழிகாட்டு விதிமுறைகள்
· ஏசி சாதனங்களில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வைக்க வேண்டும்.
» ஆன்லைன் வகுப்புக்குத் தடை இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு
» கடலூரில் அசத்தும் இளைஞர்கள்: மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேரில் முகக்கவசம் தயாரிப்பு
· சார்பு ஈரப்பதம் 40% முதல் 70% என்ற அளவில் இருக்க வேண்டும்.
· காற்று மறுசுழற்சி தவிர்க்கப்பட வேண்டும் மற்றும் புதிய காற்றை உள்எடுத்துக் கொள்வது சிறந்தது.
· குறுக்கு காற்றோட்டம் போதிய அளவில் உறுதி செய்யப்பட வேண்டும் மற்றும் காற்றை வெளியேற்றும் மின்விசிறிகளைப் பயன்படுத்தி காற்றை மாற்ற வேண்டும்.
· அறைக்குள் இருக்கும் ஏசி இயந்திரங்களின் சல்லடைகளை தொடர்ச்சியாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதன் மூலம் காற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
2) வீடுகள், தனியான பணியிடங்கள்/அலுவலகங்களுக்கான (1/4) ஏசி வழிகாட்டுதல்கள்
· மிதமான பாதிப்பு மற்றும் கட்டுப்பாட்டு சூழலுடன் உள்ள பகுதிகளுக்கு
· ஏர் கூலிங்/கன்டிசன் இயந்திரங்களின் விருப்பத் தேர்வு
· ஜன்னல் பொருத்தப்பட்ட டெசர்ட் கூலர்கள்
· ஏசிக்கள் (விண்டோ/ ஸ்பிளிட்)
· மின்விசிறிகள் மற்றும் காற்றை வெளியேற்றும் மின்விசிறிகள் உதவியுடன் புதிய காற்றைப் பெற கதவு/ ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும்.
· வெப்பநிலை & ஈரப்பதத்தின் அளவினைப் பொதுவான விதிமுறைகள் படி பராமரிக்க வேண்டும்.
3) கூட்ட அரங்குகள், மருத்துவமனைகளுக்கான (2/4) ஏசி வழிகாட்டுதல்கள்
· நடுத்தர பாதிப்பு மற்றும் கவனிப்புடன் கூடிய பகுதிகளுக்கு
· ஏர் கூலிங்/கன்டிசன் இயந்திரங்களின் விருப்பத் தேர்வு
· ஜன்னல் பொருத்தப்பட்ட டெசர்ட் கூலர்கள்
· அறை ஏசிக்கள் (விண்டோ/ஸ்பிளிட்)
· அறைக்குள் வைக்கப்படும் விஆர்வி/விஆர்எப் இயந்திரங்கள்
· மின்விசிறிகள் மற்றும் காற்றை வெளியேற்றும் மின்விசிறிகள் உதவியுடன் புதிய காற்றைப் பெற கதவு/ ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும்.
· வெப்பநிலை & ஈரப்பதத்தின் அளவினை பொதுவான விதிமுறைகளின்படி பராமரிக்க வேண்டும்.
4) நிறுவனங்கள், வணிகவளாகங்களுக்கான (3/4) ஏசி வழிகாட்டுதல்கள்
அதிக அளவிலான பாதிப்பு சூழல் மற்றும் கவனிப்புடன் கூடிய பகுதிகளுக்கு
ஏர் கூலிங்/கன்டிசன் இயந்திரங்களின் விருப்ப தேர்வு:
· ஜன்னல் பொருத்தப்பட்ட டெசர்ட் கூலர்கள்
· அறை ஏசிக்கள்/விஆர்வி/விஆர்எப் இயந்திரங்கள்
· மின்விசிறிகள் மற்றும் காற்றை வெளியேற்றும் மின்விசிறிகள் உதவியுடன் புதிய காற்றைப் பெற கதவு/ ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும்.
· வெப்பநிலை & ஈரப்பதத்தின் அளவினை பொதுவான விதிமுறைகளின்படி பராமரிக்க வேண்டும்
முடிந்த அளவு சென்ட்ரல் ஏசி இயந்திர பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். சாத்தியமில்லை என்றால், ·புதிய காற்று அதிக அளவில் கிடைக்க, காற்றைக் கையாளும் கருவிகளை முடிந்த அளவு இயக்க வேண்டும்
· வெப்ப மீட்பு சக்கரங்களை முடிந்த அளவு பயன்படுத்தக் கூடாது
· ஏஎச்யூக்களை (காற்றைக் கையாளும் கருவிகள்) அலுவல் நேரத்துக்கு 2 மணி நேரத்துக்கு முன்பு இயக்க வேண்டும் மற்றும் அலுவல் நேரத்துக்குப்பின் 2 மணி நேரம் கழித்து நிறுத்த வேண்டும்.
5) மருத்துவமனைகள், தனிமை வார்டுகளுக்கான (4/4) ஏசி வழிகாட்டுதல்கள்
மிக அதிக அளவிலான பாதிப்பு மற்றும் கட்டுப்பாட்டு சூழலுடன் உள்ள பகுதிகளுக்கு
ஏர் கூலிங்/கன்டிசன் இயந்திரங்களின் விருப்பத் தேர்வு:
· அறைக்குள் போதிய காற்றோட்டைத்தை உறுதி செய்ய வேண்டும்
· ஏசி அறைகளில் வெளியேறும் காற்றைச் சுத்தப்படுத்த வேண்டும். காற்று சுழற்சி அளவு (ACPH*) 12-ல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
· நோயாளிகளுக்குத் தேவையான ஏரோசாலிசேசன் நடைமுறைக்கு தனிமை அறைகளில் எதிர்மறையான அழுத்தம் விரும்பத்தக்கது.
இந்த அறைகளில் தனியான ஏசி இருக்க வேண்டும். சென்ட்ரல் ஏசி இருக்கக் கூடாது
· வெப்பநிலை & ஈரப்பதத்தின் அளவினை பொதுவான விதிமுறைகளின்படி பராமரிக்க வேண்டும்
· ஏசி வசதி இல்லை என்றால், அந்த அறையில் எதிர்மறையான அழுத்தத்தை உருவாக்க 3 முதல் 4 காற்று வெளியேற்றும் மின்விசிறிகளைப் பொருத்த வேண்டும்.
6) மேற்கூரை மின்விசிறிகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள்
· இயக்கும் வழிகாட்டு விதிமுறைகள்
· புதிய காற்றைப் பெற கதவு, ஜன்னல்களைத் திறந்து வைத்து, குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும்.
· அதி வெப்பம் மற்றும் ஈரப்பதத்தில் இயங்காது என்பதால் விண்டோ டெசர்ட் கூலர்களுக்கு மாற வேண்டும்.
7) ஜன்னல் பொருத்தப்பட்ட அறை கூலர்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள்
இயக்கும் விதிமுறைகள்
· புதிய காற்றைப் பெறும் வகையில் இயக்க வேண்டும் மற்றும் முடிந்த அளவு காற்றை வெளியேற்றுவதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும்.
· ஏர் கூலரில் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்தமானதாக இருக்க வேண்டும், சீரான இடைவேளையில் மாற்ற வேண்டும்.
· மழைக்காலத்தில் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த, காற்றை வெளியேற்றும் மின்விசிறிகளைப் பயன்படுத்த வேண்டும்.
· ஏர் கூலிங் பிளான்ட் வசதியுள்ள ஜன்னல் பொருத்தப்பட்ட டெசர்ட் கூலர்கள் அதிக ஈரப்பதத்தில் இயங்காது என்பதால் அதற்கு மாற வேண்டும்.
· டெங்குவைத் தடுக்கும் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும்.
8) விண்டோ/ஸ்பிளிட் ஏசிக்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள்
· இயக்கும் விதிமுறைகள்
· 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் இடையிலான வெப்பநிலையில் இயக்க வேண்டும்.
· புதிய காற்றைப் பெறுவதற்கு ஜன்னல்களை ஓரளவு திறந்து வைத்து பயன்படுத்த வேண்டும்.
9) காற்றை வெளியேற்றும் மின்விசிறிகளுக்கான (எக்சாஸ்டர் ஃபேன்) விதிமுறைகள்
· இயக்கும் விதிமுறைகள்
· வெப்பக் காற்றை வெளியேற்றுவதற்கு தொடர்ந்து இயக்க வேண்டும்
· காற்று சுழற்சிக்கு மின்விசிறி, ஏர் கூலர், ஏசி மற்றும் இதரவைகளுக்கான, காற்றை வெளியேற்றும் மின்விசிறிகளைப் பயன்படுத்தலாம்.
10) ஆவியாகும் தன்மையுடன் கூடிய ஏர் கூலர்களுக்கான விதிமுறைகள்
· இயக்கும் விதிமுறைகள்
· புதிய காற்றைப் பெறும் விதத்தில் இயக்க வேண்டும் மற்றும் முடிந்த அளவு காற்றை வெளியேற்றுவதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.
· தண்ணீர், காற்றை வெளியேற்றும் பகுதிகளை சீரான இடைவேளையில் சுத்தப்படுத்த வேண்டும்.
· அதிக ஈரப்பதத்தில் இயங்காது என்பதால், ஜன்னல் பொருத்திய, ஏர் கூலிங் பிளான்ட் வசதியுடனான ஏர்கூலர்களுக்கு மாற வேண்டும்.
· டெங்குவைத் தடுப்பதற்கான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
11) விஆர்ப்*/விஆர்வி* இயந்திரங்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள் (மேற்கூரை, கேசட் டைப் இயந்திரங்கள் போன்றவை)
· இயக்கும் விதிமுறைகள்
· 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இயக்க வேண்டும். புதிய காற்றைப் பெற, போதிய காற்றைப் வெளியேற்ற வேண்டும்
· இந்த இயந்திரங்கள் பொருத்தப்படும் இடங்களில், அறைக்குள் இருக்கும் கருவிகளின் சல்லடைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்”.
இவ்வாறு மத்திய பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago