தமிழகத்தில் மதுபானக் கடை களை திறந்தபோது, திமுக தலைவர் ஸ்டாலின் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தினார். ஆனால், திமுகவு டன் கூட்டணி அமைத்து, காங்கிரஸ் ஆட்சி நடத்தும் புதுச்சேரியில் மதுபானக் கடை கள் திறக்கப்பட்டுள்ளதற்கு திமுகவிடம் இருந்து இது வரை எந்த எதிர்ப்பும் தெரிவிக் கப்படவில்லை.
இதைக் கண்டித்தும், திமுக இவ்விஷயத்திலும் இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுவதாகக் கூறியும், அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் தலைமையில் முத்தியால்பேட்டையில் நேற்று கருப்பு பலூன்களை காற்றில் பறக்கவிடும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக வையாபுரி மணிகண்டன் கூறியதாவது: தமிழகத்தில் மதுபானக் கடை களை திறந்தபோது, திமுக தலை வர் ஸ்டாலின் கருப்புச் சட்டை அணிந்து போராட்டம் நடத்தினார்.
‘கூட்டணி தயவால் காங்கிரஸ் ஆட்சி நடத்தும் புதுவையில் மதுபானக் கடைகளை திறப்பதில் திமுக நிலைப்பாடு என்ன?’ என ஒரு வாரத்துக்கு முன்பே அக்கட்சியின் தலைவருக்கு கேள்வி எழுப்பியிருந்தோம். இதுவரை எந்த பதிலும் தெரிவிக் கவில்லை.
இந்நிலையில், புதுவையில் தற்போது மதுபானக் கடைகளை திமுக துணையோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு திறந்துள்ளது. இதைப்பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவு னமாக இருந்து வருகிறார்.
திமுகவின் கூட்டணிக் கொள்கைக்கு விரோதமாக செயல்படும் காங்கிரஸை கண்டித்து, தற்போது அரசுக்கு அளித்து வரும் ஆதரவை அவர் வாபஸ் பெறுவாரா?. எப்போதும்போல திமுக இவ்வி ஷயத்திலும் இரட்டை வேடம் போட்டுள்ளது. மக்களை ஏமாற்ற நினைத்த திமுகவின் முகத்திரை கிழிந்துள்ளது. திமுகவின் சுயமரியாதை, திமுக தலைவரின் மானம் புதுவையில் காற்றில் பறக்கிறது. இதை வெளிக்காட்டும் வகையில் கருப்பு பலூன்களை காற்றில் பறக்கவிட்டு அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago