மதுரையில் சேவா பாரதி மற்றும் கேசவ சேவா கேந்திரம் சார்பாக கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக சுமார் 5 லட்சம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு இதனை தொடங்கி வைத்தார்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 25 முதல் மதுரையில் சேவா பாரதி மற்றும் கேசவ சேவா கேந்திரம் சார்பில் பல்வேறு சேவை பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
ஊரடங்கின் காரணமாக பசியால் வாடிய ஏழை மக்களுக்கும், அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் பத்திரிகையாளர்கள் என பலதரப்பு மக்களுக்கும் மூன்று வேளையும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதுவரை 1,42,500 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி பொருளாதாரத்தில் பின்தங்கிய 7,460 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 1,10,000 பேருக்கு கபசுர குடிநீர், 10,000 முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய சேவைப் பணிகளால் நேரடியாக 1,65,000 பேர் பயனடைந்துள்ளனர்.
» அடிக்கிற வெயிலில் செத்துவிடுவோம் என நினைத்தேன்; தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் குரல்!
» வாழ்வாதாரத்துக்கு ஏங்கும் மக்கள்: ஊரக வேலை நாட்களை 200 ஆக உயர்த்துக; ராமதாஸ்
தற்போது அரசு பரிந்துரைத்துள்ள ஆர்ச்சனிச்சம் ஆல்பம் 30 என்கிற நோய் எதிர்ப்பு சக்தி மருந்தானது சேவா பாரதி மற்றும் கேசவ சேவா கேந்திரம் சார்பாக மதுரையில் சுமார் 5 லட்சம் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று காலை 9-00 மதுரை எஸ்.எஸ் காலனி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் T.G. வினய் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி ஜெயபிரகாசம், மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் இரா.தீனதயாளன், அகில இந்திய ஹோமியோ லீக் மதுரை தலைவர் மரு.தனபால், ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்தை குறைந்தது 20 குடும்பங்களுக்கு அல்லது 100 பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய விருப்பம் உள்ள சமூக ஆர்வலர்களை சேவா பாரதி மற்றும் கேசவ சேவா கேந்திரம் அன்புடன் வரவேற்கிறது. தங்களுடைய விருப்பத்தை கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொண்டு தேவைப்படும் மருந்தை பெற்று கொள்ளலாம்.
இராமச்சந்திரன் - 94861 08686
சதீஷ் பாபு - 95972 79061.
இத்தகவலை சேவா பாரதி மற்றும் கேசவ சேவா கேந்திரம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
29 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago