தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
இதையடுத்து மாவட்டத்தில் இதுவரை 46 பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் 157 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 2 பேர் உயிரிழந்துவிட்டனர். 40 பேர் ஏற்கனவே குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை நிலவரப்படி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 114 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். ஒருவர் மட்டும் வேறு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் முற்றிலும் குணமடைந்ததை தொடர்ந்து, அவர்கள் இன்று ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, அவர்களுக்கு பழக்கூடைகளை கொடுத்து, வீட்டில் 14 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago