மேலும் 9 பேருக்கு தொற்று உறுதி, இருவர் குணமடைந்தனர்: தூத்துக்குடியில் கரோனா பாதிப்பு 144 ஆக அதிகரிப்பு

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கரோனா தொற்றால் 135 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 2 பேர் உயிரிழந்துவிட்டனர். 34 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிவிட்டனர். மற்றவர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் இன்று மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவில்பட்டி ஆத்திக்குளத்தை சேர்ந்த 2 பேர் குணமடைந்ததை தொடர்ந்து, இன்று வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்