தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரத்தில் 5 மாத பெண் குழந்தை உட்பட 6 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவில்பட்டி நகராட்சியில் பணிபுரியும் ஸ்டாலின் காலனியைச் சேர்ந்த 55 வயது பெண் துப்புரவு பணியாளருக்கு கடந்த 20-ம் தேதி கரோனா தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது பேத்தி (19), பேத்தியின் கணவர் (25), இவர்களது 5 மாத பெண் குழந்தை ஆகியோருக்கு நேற்று கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் கடந்த 19-ம் தேதி மும்பையில் இருந்து வந்து, கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த 16 வயது பெண்ணுக்கு கரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது.
» பள்ளி வாசல்களில் ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதிகோரிய மனு தள்ளுபடி
» மே 22-ம் தேதி சென்னை நிலவரம்: மண்டல வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து கடந்த 16-ம் தேதி பசுவந்தனை அருகே கீழமங்களம் கிராமத்துக்கு வந்த 17, 10 வயதுடைய சகோதரிகளுக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் 6 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago