கடலூர் மாவட்டத்தில் காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெறும்போது கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த பயிற்சிப் பெண் காவலர்கள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.
கடலூர் மாவட்டம் தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் 133 பெண் பயிற்சிக் காவலர்கள் மே 4-ம் தேதி முதல் பயிற்சி பெற்று வந்தனர். அவர்கள் சென்னையில் இருந்து இங்கு வந்தவர்கள் என்பதால் அவர்களுக்குக் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த 11-ம் தேதி அன்று கிடைத்த பரிசோதனை முடிவில் அங்கு பயிற்சி அளித்த உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், இரண்டு தலைமைக் காவலர்கள், மற்றும் 10 பெண் பயிற்சிக் காவலர்கள் என மொத்தம் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையே அனைவரும் முழுமையாகக் குணமடைந்தனர். இதனையடுத்து அனைவரும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
மருத்துவமனையிலிருந்து தனி வாகனம் மூலம் மாவட்டக் காவல் அலுவலகத்திற்கு வந்த அவர்களை அலுவலக முகப்பில் நின்று காவல் துறையினரின் வாத்தியக் குழுவினர் வாத்தியம் இசைக்க, பயிற்சிக் காவலர்கள், மற்றும் காவலர்கள் மலர் தூவி, கைதட்டி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். ஸ்ரீ அபிநவ் பூங்கொத்து கொடுத்து அனைவரையும் வரவேற்றார். அதன் பின்னர், அனைவருக்கும் பழக்கூடைகள் கையுறைகள், முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றையும் வழங்கினார்.
அப்போது மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர். பாண்டியன், துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரம், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சுரேஷ் கண்ணன், காவல் ஆய்வாளர்கள் ஈஸ்வரி, விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago