தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்றும் நாளையும் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் இன்று 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாக வாய்ப்புள்ளது.
நேற்று கொளுத்தி எடுத்த வெயில்:
நேற்று 13 இடங்களில் வெயில் கடுமையாகப் பதிவாகியுள்ளது. சென்னை விமான நிலையம் மற்றும் திருத்தணியில் 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகபட்சமாக பதிவாகியது.
» கரோனா நெருக்கடியில் இருந்து அச்சு ஊடகங்கள் மீள உதவ வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை நுங்கம்பாக்கம், திருச்சி, பரமத்தி, கரூர், மதுரை, தர்மபுரி, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் 40-41 டிகிரி வெயிலும் சேலம், நாமக்கல்லில் 39 டிகிரியும் , நாகை 38, பாளையங்கோட்டை 37 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
வெப்பச் சலனம் மற்றும் கேரளாவை ஒட்டிய பகுதிகளில் மேலடுக்குச் சுழற்சி நிலவுவதால் கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, குமரிக்கடல் , தென் கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய கேரளா கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிமீ காற்று வீசும். 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
உம்பன் புயல் தாக்கத்தினால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப நிலை அதிகமாகக் காணப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தின் வடமாவட்டங்கள், புதுச்சேரி, ஆந்திரா, வடக்கு கர்நாடகா, தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் அனல்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago