மதுரையில் உள்ள பள்ளி வாசல்களில் மே 25-ல் இரண்டு மணி நேரம் ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதி கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சாகுல் ஹமீது, உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
கரோனா பரவலை தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
ஊரடங்கால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கில் சிறு சிறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது.
தற்போது இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர்.
ஊரடங்கால் இஸ்லாமியர்கள் வீட்டிலேயே தொழுகை நடத்தி வருகின்றனர். நிறைவு நாளான மே 25-ல் ரம்ஜான் பெருநாள் தொழுகை நடத்த வேண்டும்.
ரம்ஜான் தொழுகை இஸ்லாமியர்களின் மத கடமையாகும். எனவே மே 25-ல் காலை 9 மணி முதல் 11 மணி வரை இரண்டு மணி நேரம் மதுரையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்குவரவுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago