ஊரடங்கு காலத்தில் பெட்டி கடைகளுக்கு சிகரெட் விற்றவருக்கு முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஊரடங்கின் போது பெட்டி கடைகளுக்கு சிகரெட் விற்பனை செய்ததாக எம்.முத்துக்குமார் என்பவர் மீது சிவகாசி டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு முத்துக்குமார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் என் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஏற்கெனவே இதுபோன்ற ஒரு வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் ஜாமீன் பெற்றுள்ளேன். இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் வீடியோ கான்பரன்சில் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் மீது பல வழக்குகள் உள்ளன. அவர் தொடர்ந்து பொதுமக்களின் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும் சிகரெட் பாக்கெட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகிறார் என்றார்.
இதையடுத்து முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்தி சிகரெட் பாக்கெட்டுகள் எங்கிருந்து வருகின்றன என்பதை கண்டறிய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago