சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஊரடங்கால் உணவின்றி சிரமப்பட்ட 200 ஏழை குடும்பங்களுக்கு நீதிபதி, வழக்கறிஞர்கள் உதவிக்கரம் நீட்டினர்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வேலையின்றி வீட்டிலேயே முடங்கியதால், உணவிற்கே சிரமப்பட்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உணவின்றி சிரமப்பட்ட 200 ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.700 மதிப்பிலான உணவுப் பொருட்களை காரைக்குடி வட்ட சட்டப்பணிகள் குழு, வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழங்கப்பட்டன.
அவற்றை மாவட்ட உரிமையியல் நீதிபதியும், வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவருமான பாலமுருகன் வழங்கினார். கூடுதல் உரிமையியல் நீதிபதி நர்மதா, விரைவு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், வட்டாட்சியர் பாலாஜி, மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகராஜா, வழக்கறிஞர் சங்கத் தலைவர் சண்முகசேகர், செயலாளர் ராமநாதன், பொருளாளர் சங்கீதா, வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர் சித்ரா, தன்னார்வலர் நல்லமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago