சுமார் ஒரு லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழக அரசு செலவில் சொந்த ஊர் திரும்பினர்- உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை கொளத்துரைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம் சார்பில் திலக்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: வெளிமாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக தமிழகம் வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கரோனா ஊரடங்கால் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்கின்றனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர் கள் வெளியூர் செல்வதற்கான விவரங்கள் தெற்கு ரயில்வே சார்பில் ஆங்கிலம், தமிழ் மற்றம் இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே அறிவிக்கப்படுகிறது. ஒடியா, போஜ்புரி, பெங்காலி மொழிகளில் அறிவிப்பதில்லை. இதனால் இந்த மொழிகள் மட்டுமே தெரிந்த தொழிலாளர்கள் செய்வதறியாது உள்ளனர், என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் யோகேஸ்வரன் வாதிட்டார். அரசு தரப்பில், தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அரசு ப்ளீடர் வி.ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் ஆஜராகி, புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் பத்திரமாக சொந்த ஊர் திரும்ப மூத்த ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழு மற்ற மாநில அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வெளிமாநில தொழிலா ளர்கள் சொந்த ஊர் திரும்ப நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள பதிவு பெற்ற 2.43 லட்சம் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களில் இதுவரை ஒரு லட்சத்து 799 பேர் தமிழக அரசின் செலவில், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனத் தெரிவித்தனர்.

அதையடுத்து நீதிபதிகள், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்க ளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தங்குமிடங்களின் விவரங்களை அனைவரும் எளிதாக அறிந்து கொள்ளும் வண்ணம் பொதுவெளியில் சமூக இணையதளங்களின் வாயிலாக அறிவிக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு புரியும் மொழிகளில் அறிவிப்பு வெளியிடவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக எடுக் கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்