தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 113-ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் இருந்து வருவோரால், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் நேற்று வரை 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் 2 பேர் இறந்துவிட்டனர். 29 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர்.
இந்நிலையில் இன்று மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 21 பேர் மும்பையில் இருந்து வந்தவர்கள் ஆவர்.
» நெல்லை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் கரோனா தாக்கம் அதிகரிப்பு: பாதிப்பு எண்ணிக்கை 242 ஆனது
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 113-ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் இருந்து தொடர்ந்து குடும்பம், குடும்பமாக பலர் வந்து கொண்டிருப்பதால் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
56 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago