மூன்று உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடனுதவியாக தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 18) வெளியிட்ட அறிக்கை:
"வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் 2014-15 ஆம் ஆண்டு முதல் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை தமிழ்நாடு அரசு உருவாக்கி பேராதரவு அளித்து வருகின்றது. இவ்வாறு ஊக்கம் அளிக்கப்பட்டதால், தற்பொழுது தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வேளாண் பொருட்களை கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டி, வணிகரீதியாக சந்தைப்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் தற்போது சில உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம் விவசாயிகளும் கூடுதல் வருமானம் பெற்று வருகின்றனர்.
» கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு பணிக்கு வந்த எஸ்.ஐ: நேரில் சென்று வாழ்த்திய காவல் ஆணையர்
» நாகை மாவட்டத்தில் இருந்து 210 தொழிலாளர்கள் உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு
தற்போது நிலவி வரும் ஊரடங்கின்போதும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், காய்கறி மற்றும் பழங்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து, தங்கள் அருகில் உள்ள குடும்பங்களுக்கு தரமான வேளாண் பொருட்களை தொகுப்புகளாக நியாயமான விலையில் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
அந்த வகையில், கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை 113 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், 288 மெ.டன் பழ வகைகளையும், 1,670 மெ.டன் காய்கறிகளையும், 283 மெ.டன் இதர உணவுப் பொருட்களையும், 98 வாகனங்கள் மூலம் நேரடியாகவும், 70 உழவர் சந்தைகள், 55 மொத்த சந்தைகள் மற்றும் 162 சில்லரை சந்தைகளில் கடைகள் அமைத்தும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்பனை செய்துள்ளனர்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தரமான வேளாண் பொருட்களை கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளுக்கு முன்பணம் செலுத்தவும், கொள்முதல் செய்த பொருட்களை பதப்படுத்தி சரியான முறையில் சிப்பம் கட்டி, அதை நேரடியாக நுகர்வோருக்குக் கொண்டு செல்லவும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு போதிய நிதி தேவைப்படுகிறது.
இந்த நிதித் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், முதல்வர், கரோனா ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களை சேகரித்து விநியோகம் செய்ய முன்வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வரை இடைநிலை மூலதன கடன் உதவி வழங்கப்படும் என்று கடந்த ஏப்.7 அன்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, தகுதிவாய்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டன. இடைநிலை மூலதன உதவி ஒப்பளிப்புக் குழுவால் விண்ணப்பங்கள் நன்கு பரிசீலிக்கப்பட்டு, தற்பொழுது 22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு, 2 கோடியே 5 லட்சம் ரூபாய் இடைநிலை உதவியாக வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்படும் இடைநிலை மூலதன நிதி, அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் ஒரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வழங்கப்படும்.
இந்நிதியினைப் பெறுகின்ற உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மேற்கண்ட காரணங்களுக்காக இந்நிதியைப் பயன்படுத்தி, ஐந்தாம் ஆண்டின் முடிவில் இந்த இடைநிலை மூலதன நிதியினை திருப்பிச் செலுத்த வேண்டும். இவ்வாறு திருப்பிச் செலுத்தப்படும் இடைநிலை மூலதன நிதி புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடனாக வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில், 22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இடைநிலை மூலதன கடனுதவி வழங்கிடும் அடையாளமாக, கரிகாலன் பல்சஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் -திருவாரூர், மேல்மலையனூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்-விழுப்புரம் மற்றும் கழனி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்-ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் முதல்வரால் வழங்கப்பட்டன"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago