சேலத்தில் சொந்த ஊருக்கு அனுப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: வடமாநிலத்தவரை விரட்டிப் பிடித்து கைது செய்த போலீஸார்

By வி.சீனிவாசன்

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு வசொந்த ஊருக்கு அனுப்ப வலியுறுத்தி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதலால் கடந்த 55 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி, வேலை பார்த்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் இரண்டு மாதமாக வேலை இழந்து தவித்து வரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டி ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை மனுக்கள் அளித்தனர்.

ஆனால், புலம்பெயர்ந்து வந்துள்ள தொழிளார்களை மீண்டும் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்ப அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

சேலம் மாநகர பகுதியில் உத்தரப்பிரதேசம், பீகார், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தவர்கள் டீ கடை, வெள்ளிப்பட்டறை, கட்டுமானபணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் சேலம் மாநகரத்தில் பெரிய புதூர், சின்ன புதூர், சிவதாபுரம், இரும்பாலை, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

சொந்த ஊருக்கு செல்ல வாகன வசதி இல்லாத நிலையில், மாவட்ட நிர்வாகம் மூலம் வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்க மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், இன்று (மே 18) காலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ளதால், ஐந்து பேருக்கு மேல் ஒரு இடத்தில் யாரும் கூடக்கூடாது என்று போலீஸார் வட மாநிலத்தவரை எச்சரித்தனர்.

போலீஸாரின் எச்சரிக்கையை மீறி வடமாநிலத் தொழிலாளர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீஸார் வடமாநிலத் தொழிலாளர்களிடம் நான்கு நாட்களுக்குள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதாக கூறினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வெளிமாநில தொழிலாளர்கள்

ஆனாலும், வடமாநிலத்தவர் போராட்டம் செய்த நிலையில், போலீஸார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். இதனை அறிந்த வடமாநிலத்தவர்கள் போலீஸாரின் பிடியில் சிக்காமல், ஓட்டம் பிடித்தனர். பல்வேறு திசைகளில் ஒட ஆரம்பித்த வடமாநிலத்தைவரை போலீஸார் விரட்டி பிடித்து, கைது செய்தனர்.

ஓட முயற்சித்தவர்களை விரட்டிப்பிடித்து கைது செய்த போலீஸார்

ஆட்சியர் அலுவலகம் முன்பு வடமாநிலத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்