வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களால் கரோனாவை கட்டுப்படுத்துவது பெரும் சவால்- சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

By செய்திப்பிரிவு

வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால் தமிழகத்தில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரி வித்தார். இதுதொடர்பாக நேற்று தலைமைச் செயலகத்தில் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 477 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 93 பேர் ஆவர்.ஈரோடு மாவட்டத்தில் 31 நாட்களாகபுதிய வைரஸ் தொற்று இல்லை.திருப்பூரில் 15 நாட்களாகவும்,கோயம்புத்தூரில் 13 நாட்களாகவும், சேலம் மற்றும் திருவாரூரில் 10 நாட்களாகவும், நாமக்கல் மற்றும் நீலகிரியில் 7 நாட்களாகவும், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூரில் 6 நாட்களாகவும், திருச்சியில் 4 நாட்களாகவும், அரியலூரில் 3 நாட்களாகவும், கரூர் மற்றும் ராமநாதபுரத்தில் 2 நாட்களாகவும், கடலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில தினங்களாகவும் புதிய வைரஸ்தொற்று இல்லை. ஆனால், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்களை பரிசோதனை செய்யும்போது, புதிய வைரஸ் தொற்றுகள் உறுதி செய்யப்படுகின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சிவகங்கை வந்த 9 பேருக்கும், மும்பையில் இருந்து திருநெல்வேலி வந்த 44 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது பெரிய சவாலாக உள்ளது. பரிசோதனையில் இன்று நெகட்டிவ் வந்தாலும், சில தினங்களுக்கு பின்னர் அவர்களுக்கு பாசிட்டிவ் வருவதற்கு வாய்ப்புள்ளது. அதனால், வெளியில் இருந்து வருபவர்களை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்து பரிசோதனை செய்து வருகிறோம்.

தமிழகத்தில் சோதனைச் சாவடிகளில் மருத்துவக் குழுக்களைஅமைத்து பிறமாநிலத்தவர்களுக்கு பரிசோதனை செய்துஅவர்களை தனிமைப்படுத்துகிறோம். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்