சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களும் ஊழியர்களும் அரசு உத்தரவுப்படி மே 18-ம் தேதி (திங்கள் கிழமை) பணிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் கிருஷ்ண மோகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''எதிர்வரும் 18.05.2020 திங்கள்கிழமை முதல் தமிழக அரசின் உத்தரவின்படி பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகள் மற்றும் அலுவலகங்கள் ஐம்பது சதவீத ஊழியர்களுடன் இயங்க வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் ஊழியர்களை 3 குழுக்களாகப் பிரித்து வாரத்தில் தலா 2 நாட்கள் வீதம் பணியாற்ற வேண்டும்.
அனைத்து அலுவலகங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் வாரத்தின் 6 நாட்களும் பணியாற்ற வேண்டும். சுழற்சி முறையிலான பணியின்போது வீட்டில் இருக்கும் ஊழியர்கள் எலக்ட்ரானிக் முறையில் அலுவலகத்தில் தொடர்பில் இருக்க வேண்டும்''.
» வங்கக்கடலில் ஆம்பன் புயல்: தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு
» துபாயிலிருந்து காரைக்கால் வந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கரோனா தொற்று
இவ்வாறு கிருஷ்ண மோகன் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலை அடுத்து, ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago