1497 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.13 கோடியில்  உபகரணங்கள் வழங்கும் பணி தொடக்கம்

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி மாவட்டத்தில் 1,497 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.13 கோடி மதிப்பில் உபகரணங்களை வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி உபகரணங்களை வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளைக் கண்டறியும் முகாம் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்டிருந்தது. முகாமில் பல்வேறு வகையான உபகரணங்களை வழங்குவதற்கு 1,497 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு ரூ.1.13 கோடி மதிப்பில் 2448 உபகரணங்களை வழங்கத் திட்டமிடப்பட்டது.

பாளையங்கோட்டையிலுள்ள பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதற்கட்டமாக 30 பயனாளிகளுக்கு உபகரணங்களை அவர் வழங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்திகுளோரி எமரால்ட், பள்ளி தாளாளர் எஸ். சாம்சுந்தர் ராஜா, பள்ளி முதல்வர் ஜெ. கிங்ஸ்டன் ஜேம்ஸ் பால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்