சமூக வலைதளத்தில் தவறான தகவலை பரப்பினால் நடவடிக்கை- மதுரை காவல் துறை எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

மதுரை மேலூரைச் சேர்ந்த 10 வயது சிறுமி மே 8-ம் தேதி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், இச் சம்பவத்தை குடும்பத்தினரே மறைக்க முயற்சி செய்வதாகவும் சமூக வலைதளத்தில் தகவல் பரவியது.

இதை அறிந்த ஆட்சியர் டிஜி. வினய், சமூக நலத் துறை மூலம் விசாரிக்க உத்தரவிட்டார். கூடுதல் எஸ்.பி. வனிதா, மேலூர் டிஎஸ்பி சுபாஸ், ஆய்வாளர் காஞ்சனா, மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் பாண்டியராஜன் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், மரத்தில் ஏறி விளையாடியபோது, தவறி விழுந்ததால் சிறுமிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இருப்பினும் மேலூர் மகளிர் காவல் ஆய்வாளர் காஞ்சனாதேவி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்தார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, மேலூரில் சிகிச்சை அளித்த தனியார் மருத்துவரிடமும் விசாரிக்கப்பட்டது. இதற்கிடை யில் மதுரை அரசு மருத்துவம னையிலும் அந்த சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப் பட்டது. அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்குப் பிறகும் சிறுமிக்கு எதிராக தகவல் பரப்ப யாராவது முயன்றால் நடவடிக்கை எடுப் போம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்