பொதுப் போக்குவரத்து வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பேருந்துகளுக்கான வாகன வரியை மேலும் அபராதம் எதுவுமின்றி ஜூன் மாதம் இறுதி வரை ஒத்திவைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
“கரோனா வைரஸ் கோவிட்-19 நோய்ப் பரவலைத் தடுக்க இந்திய அரசு மற்றும் மாநில அரசு அறிவித்த ஊரடங்கு காரணமாக, பேருந்துகள், சரக்கு வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள் மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களின் உரிமையாளர்கள் மோட்டார் வாகனச் சட்டம் 1974ன்படி செலுத்த வேண்டிய ஆண்டு வரி காலக்கெடுவான 10.04.2020 மற்றும் காலாண்டு வரி காலக்கெடுவான 15.05.2020 வரியினை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஆண்டு வரி மற்றும் காலாண்டுக்கான அனைத்து வகை வாகனங்களுக்கான வரியினை அபராதமின்றிச் செலுத்த 30.06.2020 வரை கால நீட்டிப்பு செய்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago