மீனவர்கள் உள்ளிட்ட 14 நல வாரிய உறுப்பினர்களுக்கு 2-ம் கட்டமாக ரூ.1,000 நிவாரண உதவி அளிக்க ரூ.83.99 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில்கொண்டுஅரிசி குடும்ப அட்டைகளுக்கு கடந்த ஏப்ரலில் ரூ.1,000 நிவாரணம்அறிவிக்கப்பட்டது. அதேபோல கட்டுமானம், ஓட்டுநர்கள் நலவாரியம் மற்றும் அமைப்புசாரா இதர நலவாரியங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு கூடுதலாக ரூ.1,000 நிவாரண நிதி அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2-ம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், மே மாதத்துக்கும் நலவாரிய உறுப்பினர்களுக்கு கூடுதலாக ரூ.1,000 நிவாரணம் அளிக்கமுதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி, நலவாரியங்களுக்கான நிதி ஒதுக்கப்பட்டு, உறுப்பினர்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மீனவர்கள், பட்டாசு தொழிலாளர்கள், வணிகர்,பழங்குடியினர், நாட்டுப்புற கலைஞர்கள், பூசாரிகள், தூய்மைப் பணியாளர்கள், திரைப்பட பணியாளர்கள், நரிக்குறவர், காதி நலவாரியம், திருநங்கைகள், தமிழ்நாடு புதிரை வண்ணான், உலமாக்கள், சீர்மரபினர் ஆகிய 14 நலவாரியங்களைச் சேர்ந்த 8 லட்சத்து 39 ஆயிரத்து 950 பேருக்கு 2-ம்கட்டமாக தலா ரூ.1,000 வழங்குவதற்காக ரூ.83 கோடியே 99 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago