புதுச்சேரியில் சொந்த ஊருக்குத் திரும்ப இ-பாஸ் கேட்டு ஒரே நேரத்தில் குவிந்த வெளிமாநில தொழிலாளர்கள்

By அ.முன்னடியான்

புதுச்சேரியில் சொந்த ஊருக்குத் திரும்ப ஒரே நேரத்தில் ஏராளமான வெளி மாநிலத்தவர் இ-பாஸ் கேட்டு குவிந்தனர்.

கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 3-வது முறையாக வரும் 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்துக்கு செல்லலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. புதுச்சேரி அரசும் தனியாக http://welcomeback.py.gov.in என்ற இணையதளம் தொடங்கி அவர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. அதிலும் குறைந்த அளவிலான தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் வெளி மாநிலத்தில் இருந்து வந்து பணிபுரிந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. எனவே, அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க அரசுக்குட்ஹ் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (மே 12) உரையாற்றிய பிரதமர் மோடி 4-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவித்த நிலையில், புதுச்சேரி தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் தங்களது சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக இ-பாஸ் பெறுவதற்கு இன்று (மே 13) ஒரே நேரத்தில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். அங்கு இ-பாஸ் பெற பல மணிநேரம் அவர்கள் காத்திருந்தனர்.

இது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறும்போது, "கடந்த சில நாட்களாக இங்கிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதே போல் தொடர்ந்து பலரை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவர்களையும் அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்