சிவகங்கை மாவட்டத்தில் 21-வது நாளாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை மொத்தம் 3,368 பேருக்கு பரிசோதனை செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் 9 பேர், தேவகோட்டை, காரைக்குடி, இளையான்குடியில் தலா ஒருவர் என 12 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் 12 பேரும் குணமடைந்தனர். கடைசி நபர் மே 2-ம் தேதி குணமடைந்தார். ஏப்.20-ம் தேதிக்கு பிறகு 21 நாட்களாக கரோனா தொற்று ஏற்படவில்லை.
சிவகங்கை மாவட்டத்தில் 3,368 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை சிவகங்கை அரண்மனைவாசலில் ஓராக் டீ என்ற மூலிகை டீயை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் வழங்கினார்.
» ஊரடங்கு உத்தரவு தளர்வு: தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடக்கம்
» மே 11-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்
இதில் உலர் திராட்சை, நாட்டு மாதுளை விதை, சுருள் பட்டை, ஓமம், சீரகம், மஞ்சள், கிராம்பு, அதிமதுரம், கோக்கோ பவுடர் உள்ளிட்டவை கலந்திருக்கும்.
இந்நிழ்ச்சியில் கோட்டாட்சியர் சிந்து, நகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சிவகங்கை சமஸ்தானம் மகேஸ்துரை வட்டாட்சியர் மைலாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் நிலவேம்பு கஷாயம், கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago