செங்கல்பட்டிலிருந்து எட்டயபுரம் திரும்பிய இளைஞருக்கு கரோனா

By எஸ்.கோமதி விநாயகம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இளம்புவனத்தைச் சேர்ந்த இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எட்டயபுரம் அருகே இளம்புவனத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் செங்கல்பட்டில் உள்ள மளிகைக் கடையில் வேலை பார்த்து வருகிறார். கரோனா பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டதையடுத்து லாரியில் கடந்த 5-ம் தேதி இளம்புவனத்துக்கு வந்துள்ளார்.

தகவலறிந்து வருவாய்த்துறையினர் மற்றும் சுகாதார துறையினர் நேரில் சென்று விசாரித்து அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று அவருக்கு கீழஈரால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதில் 27 வயது இளைஞருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவரை நேற்று இரவு 9.45 மணிக்கு சுகாதாரத்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இளம்புவனம் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்