மகாராஷ்டிரா மாநிலம் சோலாப் பூரில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த 962 தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் நேற்று திருச்சி வந்தனர்.
ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பல்வேறு மாநிலங்களில் அவதிப்பட்டு வரும் புலம்பெயர்ந்த தொழிலா ளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தன.
அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் தனியார் பெரு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த 962 பேர் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 966 பேர் சிறப்பு ரயிலில் நேற்று திருச்சி வந்தனர். இவர்களில் 104 பேர் பெண்கள்.
ரயில் வந்தவுடன் ஒவ்வொரு பெட்டியில் இருந்து தொழிலாளர் கள் இறங்க அனுமதிக்கப்பட்டனர். பெயர், விவரம் சரிபார்க்கப்பட்டு தயாராக இருந்த 30 பேருந்து களில், உரிய பேருந்தில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டனர்.
தொழிலாளர்கள் விவரம் (மாவட்டம் வாரியாக): திருச்சி 29, விழுப்புரம் 79, கள்ளக்குறிச்சி 1, திருநெல்வேலி 62, திருவண்ணா மலை 57, மதுரை 55, கடலூர் 52, காஞ்சிபுரம் 50, சேலம் 49, நாமக்கல் 14, தஞ்சாவூர் 41, ராமநாதபுரம் 38, கன்னியாகுமரி 37, விருதுநகர் 33, சிவகங்கை 30, திண்டுக்கல் 28, திருவள்ளுர் 27, திருப்பத்தூர் 27, வேலூர் 26, அரியலூர் 24, புதுக்கோட்டை 24, கோவை 22, ஈரோடு 9, கரூர் 7, திருப்பூர் 1, தேனி 22, திருவாரூர் 21, நாகப்பட்டினம் 17, தருமபுரி 16, கிருஷ்ணகிரி 14, தூத்துக்குடி 16, நீலகிரி 13, பெரம்பலூர் 11, சென்னை 10.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் முன்னேற்பாடுகளை யும், தொழிலாளர்கள் வருகை யையும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு செய்தியாளர் களிடம் கூறியபோது, “தமிழ்நாட் டைச் சேர்ந்த 962 பேர், கேரளாவைச் சேர்ந்த 4 பேர் என மொத்தம் 966 பேர் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வந்துள்ளனர். அனைவருக்கும் கரோனா தொற்று உள்ளதா என்று அந்தந்த மாவட்டங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்றார்.
சிறப்பு ரயிலில் வந்த ஆண்டி மடத்தைச் சேர்ந்த தமிழ்ச் செல்வன், அகிலவாணன், புதுக் கோட்டையைச் சேர்ந்த சேட்டு ஆகியோர் கூறியபோது, “சிறப்பு ரயிலில் அரசு இலவசமாக அழைத்து வரும் எனக்கூறிய நிலையில், பந்திப்பூரில் இருந்து திருச்சிக்கு தலா ரூ.560 டிக்கெட் கட்டணம் செலுத்தியே வந்துள்ளோம்” என்றனர்.
வெளி மாநிலத்திலிருந்து தொழி லாளர்கள் வருவதையொட்டி ரயில் நிலைய வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சிறப்பு ரயில் தாமதமாக வந்ததால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொழிலாளர்களுக்கு வழங்க வைத்திருந்த காலை உணவுப் பொட்டலங்கள் வீணாகின. எனி னும், இவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய உணவு வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago