சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பு வழங்கும் பணி  25 நாட்களுக்குப் பிறகு புதுச்சேரியில் தொடக்கம்

By செ.ஞானபிரகாஷ்

சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் பருப்பு வழங்கும் பணி 25 நாட்களுக்குப் பிறகு துவங்கியுள்ளது. இம்முறையும் ரேஷன் கடைகளுக்கு பதிலாக பல்வேறு அரசு துறையினர் மூலம் தரப்படுகிறது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக லாக்டவுனிலால் மக்களுக்கு அரிசி, பருப்பு தர மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, 9,425 மெட்ரிக் டன் அரிசி, 525 மெட்ரிக் டன் பருப்பு ஆகியவை வந்தடைந்தது.

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இயங்காமல் மூடி கிடப்பதால் பல்வேறு துறையினர் மூலம் பேருந்துகளிலும், லாரிகளிலும் மூட்டைகளாக எடுத்துச் சென்று வீடு, வீடாக தர முடிவு எடுக்கப்பட்டது. அரிசியை பேக்கிங் செய்தனர்.

அரிசி விநியோகத்தை சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே தர 20 நாட்கள் எடுத்துக் கொண்டனர். அதேபோல் ரேஷன் மூலம் மஞ்சள் அட்டைத்தாரர்களுக்கு அரிசி விநியோகம் நடக்கும் என்று முதல்வர் அறிவித்து ஒரு வாரமாகியும் அதுவும் செயல்படுத்தவில்லை.

ஊரடங்கு அமலாகி 45 நாட்களாகியும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்த அரிசி, பருப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தராத அவலமே புதுச்சேரியில் நிலவியது. குறிப்பாக, சிவப்பு குடும்ப அட்டை வைத்துள்ள ஏழைகளுக்கு அரிசி மட்டும் தந்து பருப்பு தராமல் இருந்தனர்.

இச்சூழலில் பருப்பு விநியோகத்தை சிவப்பு ரேஷன் அட்டைத்தாரர்களான ஏழைகளுக்குத் தரும் பணி புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் தரப்படவில்லை. கடந்த முறை போன்று பேக்கிங் செய்து தரப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு தலா 3 கிலோ வீதம் வழங்கும் பணி நடக்கிறது.

ரேஷன் கடை மூலம் தரும் பணி புறக்கணிப்பால் ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை ஆட்சியரிடம் இந்த வாரத்தில் தர முடிவு எடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்