கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் ஓங்கோல் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 10 பேர், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், 10 பேரும் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் கெலமங்கலத்திலேயே தங்கி இருந்தனர்.
தற்போது வெளி மாநிலங்களில் இருப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால், 10 தொழிலாளர்களும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு, கெலமங்கலத்தில் இருந்து வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில எல்லைக்கு சுமார் 60 கிமீ தூரம் நடந்து வந்தனர்.
அவர்களை தங்களது மாநில எல்லைக்குள் அனுமதிக்க ஆந்திர மாநில போலீஸார் மறுத்தனர். மேலும், அவர்களை வேலைக்கு அழைத்த ஒப்பந்ததாரரை தொடர்பு கொண்டு, தொழிலாளர்களை அழைத்துச் செல்லுமாறு போலீஸார் கூறினர். இதனை தொடர்ந்து ஒப்பந்ததாரர், தொழிலாளர்களை சூளகிரிக்கு நடந்து வரும்படி கூறினார். இதனால் கூலித் தொழிலாளிகள் 10 பேரும் 36 கிமீ தூரத்தில் உள்ள சூளகிரிக்கு நடந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago