ஆதியோகி திவ்ய தரிசன 3-டி ஒளி, ஒலி காட்சிக்கு சர்வதேச தொழில்நுட்ப விருது

By செய்திப்பிரிவு

கோவை ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்கு நடத்தப்படும் `ஆதியோகி திவ்ய தரிசனம்' என்ற 3-டி ஒளி, ஒலி காட்சிக்கு சர்வதேச தொழில்நுட்ப விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒளி-ஒலி காட்சியை வடிவமைத்த `ஆக்சிஸ் 3-டி' ஸ்டுடியோவுக்கு, மோன்டோ டி.ஆர். என்ற சர்வதேச தொழில்நுட்ப இதழ் இவ்விருதை வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருதுக்காக, இங்கிலாந்தில் இரு தேவாலயங்கள், பிரான்ஸில் ஒரு தேவாலயம் உட்பட ஐரோப்பா, மத்தியக் கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா-பசிபிக் நாடுகளில் இருந்து பலர் தேர்வுப்பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். முடிவில் ஆதியோகி திவ்யதரிசனம் விருதை பெற்றுள்ளது.

இந்த 3-டி ஒளி, ஒலி காட்சி சனி, ஞாயிற்றுக்கிழமைகள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நடத்தப்படுகிறது. தற்போது கரோனா பிரச்சினையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஈஷா யோகா மையத்தினர் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்