நிகழாண்டில் தமிழகத்தில் 20% கூடுதல் நெல் விளைச்சல்: அமைச்சர் ஆர்.காமராஜ்

தமிழகத்தில் நிகழாண்டில் 20 சதவீதம் கூடுதல் நெல் விளைச்சல் அடைந்துள்ளதாக தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில், ஆட்சியர் த.ஆனந்த் தலைமையில் நேற்று நடைபெற்ற விழாவில், கூட்டுப் பண்ணையத் திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய விலையில் விவசாயக் கருவிகளை வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2011-ம் ஆண்டில் தமிழகத்தில் 101 லட்சம் டன் நெல் விளைச்சல் செய்ததன் காரணமாக, மத்திய அரசின் கிரிஷி கர்மான் விருதை தமிழகம் பெற்றது. அதிலிருந்து, தொடர்ச்சியாக இந்த விருதை தமிழகம் பெற்று வருகிறது. நிகழாண்டு, தமிழகத்தில் நெல் விளைச்சல் 20 சதவீதம் கூடுதலாக காணப்படுகிறது. டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இருந்து இதுவரை மொத்தம் 22 லட்சம் டன் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 6 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க் கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 1,787 டன் யூரியா, 1,817 டன் டிஏபி, 1,305 பொட்டாஷ், 1,007 டன் காம்பளக்ஸ் கையிருப்பில் உள்ளது என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE