தேனியில் மேலும் மூன்று பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் நேற்று வரை 55 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 42 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதம் உள்ள 12 பேர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாவட்டத்தில் மேலும் மூவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்கள் உத்தமபாளையம், மாரியம்மன்கோவில்பட்டி, தேக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மூவரும் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலைபார்த்தவர்கள்.
» தமிழகத்தில் இன்று 526 பேருக்கு கரோனா; சென்னையில் 279 பேருக்கு தொற்று; இறப்பு 44 ஆக அதிகரிப்பு
» மே 9-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்
தொற்று உறுதியானதைத் தொடர்ந்து இவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இவர்கள் சென்று வந்த பகுதிகள், பழகியவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் ரத்தமாதிரிகளும் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி கரோனா பாதிப்பு 58ஆக உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago