ஆயிரம் ரூபாயில் தொடங்கி ரூ.18 லட்சம் வரை உணவு, உதவிப் பொருட்கள் வழங்கிய தன்னார்வ அமைப்பு

By வி.சுந்தர்ராஜ்

ஆதரவற்றோர், பின்தங்கியோர், வடமாநிலத்தோர் என ஏராளமானோருக்கு உணவும், உதவிப்பொருட்களையும் எவ்வித ஓசையுமின்றி அளித்து வருகின்றனர் தஞ்சாவூரில் ஒரு தன்னார்வ அமைப்பினர்.

வடமாநிலத்திலிருந்து தஞ்சாவூர் பகுதியில் கட்டுமானப் பணிக்கு வந்தவர்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட தினத்திலிருந்து உணவுக்கு சிரமப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவுக்குத் தகவல் சென்றது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் தன்னார்வ அமைப்பான 'வசந்தம் லயன்ஸ்' சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் பீட்டர் பாபுவிடம் வடமாநிலத்தவர்கள் 100 பேருக்கு உணவு வழங்க முடியுமா என்றார். உடனடியாக களத்தில் இறங்கிய ஸ்டாலின் பீட்டர் பாபு 100 பேருக்குத் தன்னுடைய வீட்டில் ஆயிரம் ரூபாயில் சமையல் செய்து உணவை வழங்கினார்.

அப்படி தொடங்கிய உணவு வழங்கும் பணி தினமும் அதிகரித்து 200 பேர், 300 பேர் எனக் கூடுதலாகி தற்போது தினமும் 500 பேருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. இதில் வடமாநிலத்தவர்கள் மட்டுமில்லாமல் தஞ்சாவூர் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் பகுதியில் தொடங்கி கும்பகோணம் பகுதி வரை நீண்டு கிராமப்புறங்களில் உள்ள பின்தங்கியவர்கள், நரிக்குறவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் எனப் பலருக்கும் உணவு வழங்கப்படுகிறது.

ஒரு வாரத்தில் தொடங்கிய ஊரடங்கு மீண்டும் இரு முறை நீட்டிக்கப்பட்டதால், தான் மட்டும் உதவுவதைக் காட்டிலும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், தஞ்சாவூர் அனைத்து லயன்ஸ் சங்கங்கள், அமீரகத் தமிழர்கள் மறுமலர்ச்சி பேரவை, ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் என பலரையும் இதில் இணைத்துக்கொண்டு தற்போது அரிசி, மளிகைப் பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.

அதே நேரத்தில் கரோனா தடுப்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு காலை நேரங்களில் தேநீர், மதியம் உணவை ராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் வழங்கி வருகின்றனர் இந்தத் தன்னார்வ அமைப்பினர்.

மேலும், ஆயிரம் முகக்கவசங்கள், சானிடைசர்கள், சோப்புகள் ஆகியவற்றை ரெட் கிராஸ் அமைப்பு மூலம் வழங்கி கரோனா தடுப்புப் பணியில் ஓசையில்லாமல் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி இன்று (மே 9) தஞ்சாவூர் கரந்தை பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் மூலம் இவ்வமைப்பினர் வழங்கினர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் பீட்டர்பாபு கூறுகையில், "ஆரம்பத்தில் வடமாநிலத்தவர்களுக்கு உணவு வழங்கத் தொடங்கி பின்னர் ஆதரவற்றோருக்கும், நரிக்குறவர்களுக்கும் என விரிவடைந்தது. தற்போது நலத்திட்ட உதவிப் பொருட்களையும் உணவையும் வழங்குகிறோம்.

ரேஷன் கார்டுகள் இல்லாதோருக்கு ரூ.1,050 மதிப்புள்ள அத்தியாவசியப் பொருட்களையும் வழங்குகிறோம். தற்போது ரமலான் மாத நோன்புக் காலமாக இருப்பதால் முஸ்லிம்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்களையும் வழங்கி வருகிறோம். இதுவரை ரூ.18 லட்சம் ரூபாய் செலவு ஏற்பட்டுள்ளது. இனி ஊரடங்கு முடியும் வரை உணவும், உதவிப் பொருட்கள் வழங்குவதும் தொடரும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்