தமிழகம் முழுவதும் டீக்கடைகள் திறக்க அனுமதி: காய்கறி, மளிகைக் கடைகளுக்கும் கூடுதல் நேரம் அனுமதி

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் டீக்கடைகள் திறக்க நிபந்தனைகளுடன் அரசு அனுமதித்துள்ளது. பெட்ரோல் பங்க்குகள் செயல்படும் நேரமும் கூட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் அறிவிப்பு:

“தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு மார்ச் 24 முதல் அமலில் இருந்து வருகின்றது. கடந்த மே 2 அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின்படியும், பெருநகர சென்னை காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) கீழ்க்காணும் பணிகள், மே 11 ( திங்கள்கிழமை )முதல் குறிப்பிடப்பட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

எவை எவைக்கு அனுமதி?

* அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் ((All Standalone and Neighbourhood shops) காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

*அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் (All Standalone and Neighbourhood shops) காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

* சென்னை மாநகராட்சி உட்பட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) தேநீர் கடைகள் (Tea Shops)) பார்சல் சேவைக்கு மட்டும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. தேநீர் கடைகளில் சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும், தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையைச் சுத்தமாகவும் சுகாதரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கடையில், வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, ஏதும் உட்கொள்ள அனுமதி இல்லை. இதை முறையாக கடைப்பிடிக்கத் தவறும் தேநீர் கடைகள் உடனடியாக மூடப்படும்.

* பெட்ரோல் பங்க்குகள் பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

* பெட்ரோல் பங்க்குகள் பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் 24 மணி நேரமும் செயல்படும்.

* பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.

அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுவதையும், போதுமான கிருமிநாசினிகளைப் பயன்படுத்திப் பணிபுரிவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாகப் பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை ((Standard Operation Procedures)) தீவிரமாக கடைப்பிடிப்பதையும், கண்காணிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாநகராட்சி ஆணையாளர்களும், காவல் துறையினரும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அரசால் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அனைத்துத் தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

கரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்