ஊரடங்கு அமலுக்கு வந்தபின் சென்னை உயர் நீதிமன்றத்தில் 341 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக, உயர் நீதிமன்றப் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றப் பதிவுத்துறை தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன் இன்று (மே 9) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த ஊரடங்கு காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மார்ச் 26 ஆம் தேதி முதல் மே 7 ஆம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட 732 வழக்குகளில் 341 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட 215 வழக்குகளில் 105 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
» சீமான் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு
» சிவகங்கைக்கு படையெடுக்கும் சென்னைவாசிகள்: கரோனா அச்சத்தில் சிவகங்கை மாவட்ட மக்கள்
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 12 ஆயிரத்து 109 வழக்குகளில் 10 ஆயிரத்து 206 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் வழக்குகள் காணொலிக் காட்சி மூலம் விசாரிக்கப்படுகின்றன".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago