மதுக்கடைகளை படிப்படியாகத்தான் குறைக்க முடியும்: அமைச்சர் காமராஜ்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகத்தான் குறைக்க முடியும் என தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சித்தேரி, சேரன்குளம், நெம்மேலி ஆகிய 3 கிராம மக்களுக்கு கரோனா நிவாரண உதவிப் பொருட்களை நேற்று வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தொற்றால் மிகப்பெரிய பாதிப்புகள் இல்லை என்ற நிலையில்தான் தமிழகம் உள்ளது. ‘ஏ’ சிம்டமேட்டிக் என்ற அளவில்தான் கரோனா கூடுதலாக உள்ளது. அவர்கள் வீடுகளிலிருந்தே சிகிச்சை பெறலாம். கரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் மிகக் குறைவாகவே உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32. அவர்களில் 27 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுவிட்டனர். 5 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகத்தான் குறைக்க முடியும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE