என்எல்சி 2-ம் அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் 8 பேருக்குக் காயம்

By செய்திப்பிரிவு

என்எல்சி 2-ம் அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்ததில் 8 பேருக்குக் காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 1470 மெகாவாட் திறன்கொண்ட என்எல்சி 2-ம் அனல்மின் நிலையத்தில் 5 மற்றும் 6 மின்னுற்பத்திப் பிரிவில் கொதிகலன் (Boiler) இன்று (மே 7) மாலை திடீரென வெடித்துச் சிதறியது.

அப்போது அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாவாடை, சர்புதீன், அன்புராஜ், சண்முகம், பாலமுருகன், ஜெய்சங்கர், மணிகண்டன் மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய 8 தொழிலாளர்கள் நீராவியில் சிக்கிப் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் என்எல்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த அனல்மின் நிலையத்தில் இதே பிரிவில் கடந்த ஆண்டு இதுபோன்ற விபத்து நிகழ்ந்தபோது 4 பேர் காயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்