மே.17-க்குப் பின் பேருந்துகளை இயக்கத் தயாராக இருக்க வேண்டும்: அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுக்கு உத்தரவு

By கி.மகாராஜன்

ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் பேருந்து போக்குவரத்தை தொடங்குவதற்கு வசதியாக பேருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3-ம் கட்ட ஊரடங்கு மே 17-ல் முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு போக்குவரத்து சேவையை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதையடுத்து அனைத்து அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலும் கடந்த 40 நாட்களுக்கு இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளை பராமரித்து ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் இயக்கும் வகையில் தயார்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு போக்குவரத்துக் கழகங்களில் பராமரிப்புப் பணி ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத்துறை முதன்மை செயலர் தர்மேந்திரபிரதாப் யாதவ், அனைத்து அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் இயக்குவதற்கு தயாராக அரசு பேருந்துகளை தயார்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் பஸ்களை இயக்குவதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

பஸ்களில் 50 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும். தனி மனித விலகலை பின்பற்றி பயணிகள் அமரும் வகையில் இருக்கைகளில் எண் குறிப்பிட வேண்டும்.

பயணிகள் ஒருவருக்கொருவர் தொட்டுக்கொள்வதை தவிர்க்க பயணிகளை பின்வாசல் வழியாக ஏறவும், ஓட்டுநர் இருக்கை அருகேயுள்ள முன்வாசல் வழியாக இறக்கவும் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பயணத்துக்கு பிறகும் பஸ்சில் கண்டிப்பாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பஸ்சில் ஏசி பயன்படுத்தக்கூடாது

பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாக பயணிகளை பஸ்சில் ஏற்றக்கூடாது. பஸ் நிறுத்தத்திலும், பஸ்சில் அமரும் போதும் பயணிகள் 6 அடி தூர தனிமனித விலகலை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணியை தொடங்கும் போது கண்டிப்பாக காய்ச்சல் சோதனை செய்ய வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினியால் கைகளை துடைத்துக்கொள்ள வேண்டும்.

ஓட்டுனர் மற்றும் பயணிகள் இடையே தனி மனித விலகலை கடைபிடிக்க ஓட்டுனர் இருக்கையை சுத்தி வெளிப்படையான ஸ்கீரின் போட வேண்டும்.

பஸ் நிறுத்தங்கள், பஸ் நிலையங்களில் 4 மீட்டர் இடைவெளியில் பஸ்களை நிறுத்த வேண்டும். பஸ் நிலையங்கள், நிறுத்தங்கள், பணிமனைகளில் அடிக்கடி கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

டிக்கெட் கட்டணத்துக்கு பாக்கி சில்லரை கொடுப்பதை தவிர்க்க சரியான சில்லரை தருமாறும், கியூஆர் கோடு அடிப்படையிலான பணம் செலுத்துதல், செல்போன் வழியாக, மின்னணு முறையில், பே டைம், கூகுள்பே, ஜி பே வழியாக டிக்கெட் கட்டணத்தை செலுத்தவும் பயணிகளை வலியுறுத்தலாம்.

இந்த வழிகாட்டுதல்களை அனைத்தையும் அரசு போக்குவரத்து கழக அனைத்து மேலாண்மை இயக்குனர்களும் ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்