தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58இல் இருந்து 59 ஆக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. இந்நிலையில், அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 58 இல் இருந்து 59 ஆக உயர்த்தி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 7) வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58 இல் இருந்து 59 வயதாக உயர்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவிருந்த அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு மேலும் 2 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அனைத்துத் தரப்பு அரசு ஊழியர்களும் பணி செய்ய வேண்டியுள்ள நிலையில், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக அரசு, இத்தகைய முடிவுகளை எடுப்பதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago