தென்காசி மாவட்டத்தில் நேற்று வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேர் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர்களில், 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், இன்று புளியங்குடியைச் சேர்ந்த 27 வயது இளைஞருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால், தென்காசி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 48 பேர் புளியங்குடியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, புளியங்குடியைச் சேர்ந்த 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 13 பேர் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும், மற்றவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
» கரோனா ஊரடங்கால் பாதிப்பு: வருங்கால வைப்பு நிதியம் ரூ.481.63 கோடி முன்பணம் விநியோகம்
» சிவகங்கை மாவட்ட ரேஷன்கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்: குடும்ப அட்டைதாரர்கள் அதிருப்தி
இந்நிலையில், தென்காசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 4 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவருக்கு சர்க்கரை நோயுடன் உடல்நிலை பாதிப்பு அதிகமாக இருந்ததால், அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.
அவரது மருமகள், பேரன், பேத்தி ஆகியோர் தாங்கள் ஒரே இடத்தில் சிகிச்சை பெற விரும்புவதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து, மூதாட்டியுடன் சேர்த்து 4 பேரும் திருநெல்வேலி அரசு மருத்தவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago