கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 31 கர்ப்பிணிகளுக்கு கரோனா தொற்று?- மாவட்ட நிர்வாகம் அலட்சியம் என கள்ளக்குறிச்சி எம்பி குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 53 ஆக இருந்த நிலையில், இதில் 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.கோயம்பேட்டிலிருந்து வந்தவர்கள் குறித்து தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்திவருகிறது.

இந்த நிலையில் நேற்று வெளியான தகவல்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 68 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாகவும், இதில் ஆண்கள் 37 பேர், பெண்கள் 31 பேர் எனவும் தெரியவந்துள்ளது.இந்த 31 பேரின் பரிசோதனைகள் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டு வெளியாகியுள்ளது.

இதனால் 31 கர்ப்பிணி பெண்களின் ரத்த மாதிரிகளை, மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தும் வகையில் சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும்,அதனால் அவர்கள் குறித்த தகவலை வெளியிடாமல் மறைத்து வைத்துள்ளதோடு, 31 கர்ப்பிணிப் பெண்களில் சிலர் மட்டுமே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், ஏனையோர் வீட்டிலேயை தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுருத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர் கரோனா வைரஸ் அறிகுறிகளோடு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் கர்ப்பிணிப் பெண்கள்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினர் கவுதமசிகாமணி அரசு உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும், ஏற்கனவே பரிசோதனைக்கு உட்படுத்தியவர்களின் மாதிரிகளை மீண்டும் சென்னைக்கு அனுப்பியுள்ளது ஆச்சரியத்தைத் தருகின்றது .

தாமதிக்காமல் உடனடியாக உண்மையான முடிவுகளை மக்களுக்கு தெரிவித்து மக்களை காப்பாற்ற வேண்டும் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து உண்மைத்தன்மை அறிய மாவட்ட ஆட்சியர் கிரண்குராலாவை தொடர்புகொண்டபோது, அவர் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE