உலக அளவில் கிடைத்த உரிமையான 8 மணி நேர வேலை என்பதை கரோனாவை பயன்படுத்தி 12 மணி நேரமாக மாற்ற சில மாநிலங்களில் அமல்படுத்த முயல்வதும், இஎஸ்ஐ, பிஎஃப் நிதியில் கைவைக்க முயலுவதையும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என் சிஐடியூ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிஐடியூ மாநில பொதுச் செயலாளர் அ.சவுந்தரராஜன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“பெரும் போராட்டத்திற்கு பின் உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 8 மணி நேர வேலையை கொரோனா தொற்று நோயை பயன்படுத்தி பறிக்கப்பார்க்கிறது. இன்றைய உ ற் பத்தி உலகில் இயந்திர மயமாக்கப்பட்டபின் தானியங்கி இயந்திரங்களுக்கு இணையாக மனிதர்கள் உழைத்தாக வேண்டியுள்ளது. விஞ்ஞான ரீதியாக இது கடும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை பல ஆய்வுகள் உணர்த்தியுள்ளது.
இதன்காரணமாக சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ஐஎல்ஓ) வேலை நேரத்தை 6 மணிநேரமாக மாற்ற வேண்டும் என்று அனைத்து நாடுகளையும் வலியுறுத்துகிறது. இச் சூழலில் விஞ்ஞான ரீதியாக 6 மணி நேரமாக மா ற் றுவத ற்கு பதிலாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளை லாபத்தி ற் கு வழிவகுக்கின்ற முதலாளிகளின் விருப்பத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்.
மேலும் தொழிலாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த தொகையான ஈஎஸ்ஐ, பிஎப்.போன்ற பணத்தை முதலாளிகளுக்கு கொடுக்க உத்தேசித்துள்ளதை சிஐடியு வன்மையாக கண்டிக்கிறது. தொழிலாளர்களின் பணத்தை வேறுயாருக்கும் கொடுப்பதையோ, அதிலிருந்து எடுப்பதையோ அனுமதியோம். கரோனா பெரும் தொற்றைப் பயன்படுத்தி பிஎம் கேர் நிதிக்கு பல கோடிகள் வந்ததுள்ளன.
அதைத்தான் மக்கள் நலனுக்குப் பயன்படுத்த வேண்டுமேயன்றி தொழிலாளர்களின் சேமிப்பையல்ல என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். கரோனா பெரும் தொற்றின் காரணமாக கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு நாடுபூராவும் அமுலாக்கப்பட்டது. இதன் விளைவு ஆலைகள் அனைத்தும் உற்பத்தியை நிறுத்தியது. சேவை நிறுவனங்களின் வேலைகள் நின்றது.
அரசு பொது போக்குவரத்தை நிறுத்தியது. கடைகள் அடைக்கப்பட்டன. எல்லாம் கரோனா தொ ற் று பரவிவிடக்கூடாது என்பதற்காகவே. விளைவு அனைத்துத்துறையிலும் வேலை இழப்பு, வருமான இழப்பை தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர். விவசாயிகளின் விளைப் பொருட்கள் விற்க முடியவில்லை. விவசாயத் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். புலம் பெயர்ந்த தொழிலளர்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை.
கடுமையான பொருளாதார சிரமங்களை அனைவரும் சந்தித்து வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் கடந்த 3-ம் தேதியிலிருந்து ஊரடங்கை ஓரளவு தளர்த்தியது. தொழிலாளர்களின் இழப்பை ஈடுசெய்ய அரசு முறையான உருப்படியான முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அரசுகள் வாரி இறைக்கின்றனர்.
இவைகள் போதாது என இப்போது உ ற் பத்தியாளர்கள் அமைப்புகள் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வைக்கின்றனர். குறிப்பாக 8 மணி நேர வேலையை 12 மணிநேரமாக மா ற்ற வேண்டும் என்பது. இந்தியாவில் ஒருசில மாநிலங்களில் உ ற் பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு 12 மணிநேரமாக அறிவித்துள்ளது.
தமிழகத்தின் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை மீண்டும் நிரூபிக்க வேண்டியுள்ளது.எனவே வரும் 10-ம் தேதி காலை 10.30 மணி முதல் 10.40 மணி வரை தங்களது வீடுகளின் முன் செங்கொடியுடன், கோரிக்கை அட்டைகளுடன் உரிமை முழக்கத்தை எழுப்புவோம். தமிழகத்தில் தொழிலாளர்களை பாதிக்கும் எந்த சட்டத்தையும் அமுலாக்க அனுமதியோம் ”.
இவ்வாறு அ.சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago