தமிழகத்தில் மீனவர்களுக்கு வழங்குவது போலவே அனைத்து முடி திருத்தும் தொழிலாளிக்கும், சலவைத் தொழிலாளிக்கும் குடும்ப நிவாரண உதவியாக மாதம் ரூபாய் 5000 வழங்கிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
‘‘ மே மாதம் 4ம் தேதி முதல், தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. பல்வேறு வகைப்பட்ட அத்தியாவசியப் பணிகளும் அனைத்து வகையான தொழில்களும், கடைகளும் திறக்க அனுமதி அளித்தும் கூட, சலூன்கள் திறக்க நோய் தொற்று காரணமாக அனுமதி இல்லை. முடி திருத்தகங்களுக்கு ஏன் அனுமதி இல்லை என்பதை அனைவருமே புரிந்து கொள்வர்.
கர்நாடக பாஜக அரசு சுமார் 60000 சலவைத் தொழிலாளிகளுக்கும், 2,30,000 முடி திருத்துபவர்களுக்கும் மாதம் ரூபாய் 5000 நிவாரண தொகை அறிவித்துள்ளது.
எனவே இத்தகைய சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து முடி திருத்தும் தொழிலாளிக்கும், சலவைத் தொழிலாளிக்கும் குடும்ப நிவாரண உதவியாக மாதம் ரூபாய் 5000 (மீனவர்களுக்கு வழங்குவது போலவே) வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
அவர்களது பணி துவங்க தமிழக அரசு அனுமதிக்கும் வரை இந்த நிவாரண உதவி தொடர வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago