வீட்டு வேலைப் பணியாளர்கள் பணிபுரிவதற்கான அனுமதி ரத்து; தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

வீட்டு வேலைப் பணியாளர்கள் பணிபுரிவதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 5) வெளியிட்ட அறிவிப்பில், "மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவினை மே 4-ம் தேதி முதல் மே 17-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சில தளர்வுகளுடன் நீட்டிப்புச் செய்ததன் அடிப்படையில் மே 3-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

அந்த அரசாணையில் வீட்டு வேலைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்றுப் பணிபுரிய அனுமதிக்கப்பட்டது.

தற்போது, பொதுநலன் கருதி மே 3-ம் தேதி அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் வீட்டு வேலைப் பணியாளர்களுக்கு பணிபுரிய வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுகிறது. ஆகவே, வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் வரும் மே 17-ம் தேதி நள்ளிரவு ஊரடங்கு முடியும் வரை தாங்கள் பணிபுரியும் வீடுகளுக்குச் செல்லாமல் அவரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்