மது குடிக்காமல் இருந்துவிடலாம் என எண்ணியவர்களுக்கு மீண்டும் மது குடிக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மே 5) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மே 7 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்ற அறிவிப்பையும், பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தியதையும் திரும்பப் பெற தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.
மதுக்கடைகளைத் திறப்பதால் உடல்நலன் கெடும் என்பது மட்டுமல்லாமல் சட்டம் - ஒழுங்கும் பாதிக்கப்படும். மேலும், மது குடிக்காமல் இருந்துவிடலாம் என எண்ணியவர்களுக்கு மீண்டும் மது குடிக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதேபோல பெட்ரோலுக்கான மதிப்புக் கூட்டு வரி 28 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும் டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரி 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்துள்ளதால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் மறைமுகமாக விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கும்.
எனவே தமிழக அரசு மதுக்கடைகளை மே 7 ஆம் தேதி திறக்க அறிவித்ததையும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணமான மதிப்புக் கூட்டு வரியை உயர்த்தியதையும் திரும்பப் பெற மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என வாசன் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago