கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்குள் நுழைவதைத் தடுக்க போலீஸார் பள்ளம் தோண்டி பாதையைத் துண்டித்துள்ளனர்.
புதுச்சேரியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதனால் புதுச்சேரி எல்லைப் பகுதிகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழகப்பகுதிகளான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது.
இதனால் அங்குள்ளவர்கள் புதுச்சேரி எல்லைக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் புதுச்சேரி - தமிழக எல்லைப் பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கிராமங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் சிறு சிறு வழிகளையும் போலீஸார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுபோல் கடலூரைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரி அடுத்த பாகூர் பகுதியில் நுழையாமல் தடுக்க சோரியாங்குப்பம், குருவிநத்தம், கொமந்தான்மேடு போன்ற பகுதிகளில் போலீஸார் தடுப்புகள் அமைத்து உள்ளனர்.
ஆனாலும் கடலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியிலுள்ள ஆற்றங்கரையோரயொட்டிய நிலத்தின் வழியாக புதிய பாதையை ஏற்படுத்தி பாகூர் பகுதிக்குள் வருகின்றனர்.
இதனை முற்றிலும் தடுத்திடும் வகையில் சோரியாங்குப்பம் மற்றும் நத்தப்பட்டு ஆற்றங்கரையோர பகுதியில் பாகூர் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் போலீஸார் ஜேசிபி இயந்திரம் மூலம் பாதையில் பள்ளம் தோண்டி கடலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் யாரும் உள்ளே நுழையாதபடி துண்டித்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து உதவி ஆய்வாளர் விஜயகுமார் கூறும்போது,‘‘கரோனா அச்சுறுத்தலால் கடலூர் பகுதியில் இருந்து புதுச்சேரிக்குள் நூழையும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் நத்தப்பட்டு உள்ளிட்ட தமிழகப்பகுதிகளில் இருந்து ஆற்றங்கரையையொட்டி குறுக்கு வழியிலும், ஒத்தையடி பாதைகள் வழியாகவும் ஏராளமானோர் புதுச்சேரிக்குள் வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் தற்போது சிவப்பு பகுதியாக உள்ளது. இதனால் அங்கிருந்து இங்கு வருபவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே, அதனை தடுக்க சாலையில் பள்ளம் தோண்டி துண்டித்து நடவடிக்கை எடுத்துள்ளோம்’’இவ்வாறு தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago