சென்னையில் 747 திருமண மண்டபங்கள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க நோட்டீஸ்: 50,000 படுக்கைகள் தயாராகிறது: ஆணையர் பிரகாஷ் பேட்டி

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக படுக்கைகள் நிரம்பி வருவதால் சென்னையில் மேலும் 50 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்ய கல்யாண மண்டபங்களை ஒப்படைக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார், ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளின் சிறப்பு வார்டுகள் நிரம்பியுள்ளது. இதனால் தனியார் கல்லூரிகளில் படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர மணப்பாக்கம் வர்த்தக மையத்திலும் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் 50 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக பள்ளிகள், திருமண மண்டபங்களை பயன்படுத்த உள்ளனர்.

இதுகுறித்து ஆணையர் பிரகாஷ் அளித்த பேட்டி:

“சென்னையில் தளர்வு செய்யப்பட்டதில் ஒரு பகுதியாக தனித்தனிக் கடைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் சலூன் கடைகள் வராது. அனுமதிக்கப்பட்ட தனித்தனிக்கடைகள் என்றால் அனுமதிக்கப்பட்ட கடைகள் என்று அர்த்தம் அது குறித்த தெளிவான வழிகாட்டுதல் இன்று மாலை வெளியிடுவோம். மாநகராட்சியின் நோக்கம் 50 ஆயிரம் படுக்கைகள் உருவாக்க பகுதிகளை அணுகவுள்ளோம். இதுவரை 4000 படுக்கை பகுதிகள் தயாராக உள்ளது. மாநகராட்சி பள்ளிகள், அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் என தெரிவித்துள்ளோம்.

மொத்தம் 50000 ஆயிரத்தில் முதல் 25000 படுக்கைகளுக்கு அரசு உயர் கல்வி நிறுவனங்கள், அடுத்து 25000 அரசுப்பள்ளிகள் பின்னர் தனியார் பள்ளிகள் என படிப்படியாக செல்ல உள்ளோம். அடுத்து சென்னையில் உள்ள கல்யாண மண்டபங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். சென்னையில் 747 கல்யாண மண்டபங்கள் உள்ளது. அவை அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். தேசிய பேரிடர் சட்டத்தின்கீழ் அதற்கு எங்களுக்கு அதிகாரம் உள்ளது.

அதை அவர்களுக்கு தெரிவித்து விட்டோம், ஏனென்றால் இது தேசிய அவசர நிலை காலம். இப்ப கல்யாண மண்டபம் கிடைத்தவுடன் முதல்வேலையாக அங்கு படுக்கைகள் சேமிக்கத்தொடங்கி விடுவோம், 50 ஆயிரம் படுக்கைகள் ஒரு மாதத்துக்குள் போட்டுவிடுவோம். இப்போதைக்கு 4000 உள்ளது. அடுத்த வாரம் 10 ஆயிரம், ஒரு மாதத்துக்குள் 50 ஆயிரம் படுக்கைகள் தயாராகிவிடும்.

எங்கள் பணி படுக்கை வசதிகள் தயார் செய்து கொடுத்துவிடுவோம், கழிப்பறை, தங்குமிடம், உணவு இதை தயார் செய்து கொடுப்பது எங்கள் முதல் வேலை. பின்னர் பொது சுகாதாரத்துறை அங்கு அவர்களது வேலையை பார்த்துக்கொள்வார்கள்”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்