ஸ்ரீரங்கம் அருகே ஏறத்தாழ 30 ஏக்கர் பரப்பளவில் ரூ.8.03 கோடி மதிப்பீட்டில் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய அளவிலான வண்ணத் துப்பூச்சி பூங்கா கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, திறப்பு விழாவுக்காக அரசின் அறிவிப்பை எதிர்நோக்கியுள்ளது.
வண்ணத்துப்பூச்சிகளைப் பாதுகாக்க ஆசிய கண்டத்திலேயே மிக பிரம்மாண்டமான அளவிலான வண்ணத்துப்பூச்சி பூங்காவை ரங்கம் பகுதியில் ஏற்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 2012-ல் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ரங்கத்தை அடுத் துள்ள மேலூர் நடுக்கரை கிராமத் தில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கு அருகில் 30 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ரூ.8.03 கோடியை ஒதுக்கீடு செய்து, 2013 ஜனவரியில் பூங்கா கட்டுமானப் பணியையும் தொடங்கப்பட்டன.
முட்டையிடுதல், புழு வளருதல், தேன் குடித்தல் ஆகிய தனது வாழ்க் கைச் சக்கரத்துக்கு வண்ணத்துப் பூச்சிகள் ஒவ்வொரு விதமான தாவரங்களையும் தேர்வு செய்யும். இதற்காக இந்தப் பூங்காவில் சின்யா, பென்டாஸ், டிரைக்டரி, புலும்பாகோ, கோபி, அஸ்காப்பியா உள்ளிட்ட வண்ணத்துப்பூச்சிகளுக்கு மிகவும் பிடித்தமான நூற்றுக்கணக்கான தாவரங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு, நடவு செய்யப்பட்டுள்ளன.
ஏறத்தாழ ஒரு ஏக்கர் பரப்பளவில் வண்ணத்துப்பூச்சிகளின் உற்பத்தி பெருக்குவதற்கான நவீன வசதி கள் கொண்ட உள் அரங்கு வண்ணத்துப்பூச்சியின் வடிவத்திலேயே கட்டப்பட்டுள்ளது. இதுதவிர, வண் ணத்துப்பூச்சியின் வாழ்க்கை முறையை பார்வையாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில், சிறு திரையரங்கம், புல்வெளிகள், குழந்தைகள் விளையாடுமிடம், செயற்கை குடிசை, செயற்கை நீருற்று, நீர் தாவரங்கள் கொண்ட குட்டைகள், சிறு மரப்பாலங்கள், பார்வையாளர்கள் சுற்றி வர 4 கி.மீ தூரத்துக்கு நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
காண் போரை கவரும் வகையில் வண்ணத் துப்பூச்சியின் மாதிரி உருவங் களும் பிரம்மாண்டமாக அமைக்கப் பட்டுள்ளன.
ஆசிய கண்டத்திலேயே பெரியது
வண்ணத்துப்பூச்சிகளுக்காக பல்வேறு இடங்களில் உள் அரங்கு கள் அல்லது திறந்தவெளிப் பூங் காக்கள் இருந்தாலும், திறந்தவெளி மற்றும் உள் அரங்குகள் ஒருங்கே அமையப்பெற்ற ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய பூங்கா இதுதான் என்கின்றனர் வனத்துறையினர்.
இந்தப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு போதுமான வசதிகளை செய்துதரும் வகையில் சுற்றுலாத் துறை ரூ.3.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago