புதுச்சேரியில் புதிதாக நோய் தொற்றில்லை. சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார். 4 பிராந்தியங்களிலும் எல்லைகளை கண்காணிக்க 125 பறக்கும் காமிராக்களை வாங்க சுகாதாரத்துறை அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
புதுச்சேரியில் 4 பிராந்தியங்கள் உள்ளன. புதுச்சேரி, மாஹேயில் இதுவரை 9 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கிசிச்சை பெற்று இதுவரை ஆறுபேர் நலம் அடைந்துள்ளனர். தற்போது 3 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடலூரை சேர்ந்த மூன்று பேர் ஜிப்மரில் சிகிச்சையில் உள்ளனர்.
தற்போதைய கரோனா சூழல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது
புதுச்சேரியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணமடைந்தார். தற்போது புதுச்சேரியில் இருவரும், மாஹேயில் ஒருவரும், கடலூரை சேர்ந்த 3 பேர் ஜிப்மரிலும் என மொத்தம் 6 பேர் சிகிச்சையில் உள்ளனர். தற்போது புதுச்சேரியில் சிகிச்சையில் உள்ளோருக்கு ஓரிரு நாட்களில் மீண்டும் பரிசோதனை எடுக்கப்பட்டு முடிவுகள் வெளியாகும்.
காரைக்கால், ஏனாம் பச்சை மண்டலத்திலும் புதுச்சேரி, மாஹே ஆரஞ்சிலும் உள்ளது. இதர மாநிலங்களை பார்த்து முடிவு எடுக்க முதல்வரிடம் பலரும் கோரியுள்ளோம்.
புதுச்சேரியில் தொகுதி வாரியாக எத்தொகுதிகள் பச்சை, ஆரஞ்சு மண்டலத்தில் வரும் என ஆராய சொல்லியுள்ளோம். பச்சை மண்டலமாக இருந்தாலும் விலகியிருத்தல், முக கவசம் அணிந்து வர்த்தகம் தொடங்கலாம்.ஊரடங்கு தளர்வில் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்று தெரிவித்துள்ளோம், புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களிலும் எல்லை வழியாக யாரும் வருகிறார்களா என்பதை கண்காணிக்க 125 பறக்கும் கேமிராக்கள் தேவை என்று அரசிடம் தெரிவித்துள்ளோம்.
அதை பிறகு நான்கு பிராந்தியங்களிலும் போலீஸார் பயன்படுத்த முடியும். உடன் வாங்க எழுத்துப்பூர்வமாக சுகாதாரத்துறை மூலம் தர உள்ளோம் என்று தெரிவித்தார்.
சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறுகையில், கட்டுப்பாட்டு பகுதிகளை கையாளும் சூழல், ஊரடங்கு தளர்த்தப்பட்டால் சுகாதாரத்துறை செயல்பாடுகள் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிப்போம். அறுவை சிகிச்சை தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டு தெரிவிக்கப்படும்.
புதுச்சேரியில் புதிதாக நோய் தொற்று உருவாகவில்லை. எல்லை பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. அதைஒட்டியுள்ள புதுச்சேரி பகுதியிலும் சீல் வைக்கிறோம் விழுப்புரம் -மண்ணாடிப்பட்டு 21 வழிகள் அடைக்கவும் பரிந்துரைத்துள்ளோம். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் நலமுடன் உள்ளனர். இது சாதகமான விஷயம். அதே நேரத்தில் கரோனா தொற்று யாருக்கு பாதிப்பு என்பதே தெரியாத சூழல் என்பது பாதக விஷயம், தளர்த்தப்பட்டால் தனிப்பட்ட சுகாதாரம் அவசியம்." என்று குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago