புதுச்சேரியில் மே இறுதி வரை ஊரடங்கு தொடர வாய்ப்புள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் இன்று (மே 2) கூறுகையில், "புதுச்சேரியில் 3 பேரும், மாஹே பிராந்தியத்தில் ஒருவரும், கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சார்ந்த 3 பேர் ஜிப்மரிலும் என மொத்தம் 7 பேர் கரோனா பாதிப்பில் புதுச்சேரி மாநிலத்துக்குள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்று அல்லாமல் காரைக்கால், ஏனாம் பிராந்தியங்கள் பச்சை மண்டலமாக உள்ளது. மத்திய அரசின் உத்தரவின்படி அமைச்சரவை கூடி புதுச்சேரியில் பச்சை, ஆரஞ்சு மண்டலம் எனப் பிரிக்கப்படும். மே மாதம் இறுதி வரை கூட ஊரடங்கு தொடர வாய்ப்பு உள்ளது. மக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார், "புதுச்சேரியில் ஊரடங்கைத் தளர்த்துவதற்கான வாய்ப்பு இருந்தாலும் மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருந்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், மக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்ற புகார்கள் வந்துள்ளன. முகக்கவசம் அணியுங்கள். புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் அனைவரும் உட்பட 66 ஆயிரம் பேர் 'ஆரோக்கிய சேது' செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago