உழைத்து தயாரித்ததை விற்க முடியாததால் உணவில்லை; ஊசிமணி பாசியை விற்க முடியாமல் பாதிப்பில் நரிக்குறவர்கள்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் ஊரடங்கால் தாங்கள் உற்பத்தி செய்த ஊசி, மணி, பாசியை விற்க முடியாமல் பாதிப்பில் நரிக்குறவர்கள் தவிக்கின்றனர்.

கரோனா அச்சுறுத்தலால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் ஏழை மக்களும், தினமும் உழைத்து வாழ்வோரின் வாழ்வும் புரட்டிப் போடப்பட்டுள்ளது. சமூகத்தில் தினக்கூலி செய்து வாழ்வோர் தவிப்பு ஒருபுறம். ரேஷன் அட்டை இருந்தால் அரிசி, பருப்பு தர மத்திய அரசு உத்தரவிட்டு, அருகிலுள்ள தமிழகம், ஆந்திரம், கேரளம் மாநிலத்தவர்கள் அவை அனைத்தும் தந்து முடித்தாலும் சிறிய மாநிலமான புதுச்சேரியில் இப்பணி ஜவ்வாக இழுக்கிறது.

ரேஷன் அட்டை, அடையாள அட்டை என ஏதுமில்லா மக்களும் இந்நாட்டில் ஏராளமானோர் உண்டு.

புதுச்சேரியில் வில்லியனூர் மதகடிப்பட்டு, ஒதியம்பட்டு ஆகிய பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் தயாரித்த ஊசி, மணி மற்றும் பாசிகளை விற்க முடியாமல் உள்ளனர். தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவின்றித் தவித்து வருகின்றனர்.

நரிக்குறவர்கள் கூறுகையில், "இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவால் நாங்கள் தயாரித்த பொருட்களை விற்க முடியாமலும் சாப்பாட்டுக்கே வழி இல்லாமலும் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். நாங்கள் பொருட்களை விற்கச் சென்றால் எங்களை ஊருக்குள் விடாமல் விரட்டி அடிக்கின்றனர். உணவும் இல்லை, வாழ்வும் இல்லை" என்கின்றனர், வேதனையுடன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்