ராமேசுவரத்தில் கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்களுக்கு பிராமணர் சங்கம் சார்பாக தினமும் இலவச மூலிகை தேநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக அவர்களது வீட்டுக்குள் இருக்க அறிவுறுத்துப்பட்டுள்ளது.
இதனையடுத்து சுகாதாரத் துறையினர், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து அவர்களுடைய பணியை மக்களுக்காக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கின் போது பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரத் துறையினர், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் ராமேசுவரத்தில் பிராமணர் சங்கம் சார்பில் தினமும் 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு காலை மாலை இரு வேளையும் இலவசமாக மூலிகை தேநீர் வழங்கப்பட்டு வருகிறது.
» கோவில்பட்டி கடலை மிட்டாயை பள்ளிகளில் சத்துணவு உடன் வழங்க நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
'ஊரடங்கை அமல்படுத்த அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பணியாளர்கள் தேநீர் கூட கிடைக்காமல் சிரமப்படுவதை பார்த்தோம். அதனால் அவர்களுக்கு, எங்களால் முடிந்த அளவு மூலிகை தேநீரை வழங்கி வருகிறோம்.
அரசுடன் சேர்ந்து, கரோணா தடுப்பு பணியில் ஒரு சிறிய பணியை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம், என்றனர். இவர்களின் செயல் பணியாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எஸ். முஹம்மது ராஃபி
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago